×

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது: தேசிய நில அதிர்வு மையம் தகவல்

மஹாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்மை காலமாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹிங்கோலி நகரில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில், காலை 5.09 மணிக்கு நிலநடுக்கும் ஏற்பட்டதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. வீடுகளில் இருந்தவர்களுக்கு இந்த நிலநடுக்க உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது: தேசிய நில அதிர்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,National Seismic Center ,National Seismic Centre ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு