×

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்த 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரில் சந்தன மாரியம்மன் கோவிலில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் முத்து சுடலி இவருடைய கணவர் முனியசாமி இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த 18ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வறுமையில் இருக்கக்கூடியவர்கள் இரண்டாவது குழந்தை வளர்க்க முடியாத சூழ்நிலையில் ஆளாகியுள்ளனர். இதனால் அந்த குழந்தையின் தாய் முத்து சுடலி ராஜேஷ் என்பவரிடம் இது சம்மந்தமாக யோசனை கேட்டுள்ளார், ராஜேஷ் என்பவர் தென்காசி மாவட்டம் ஜெயபால் என்பவர் உதவியுடன் ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊரை சேர்ந்த ரேவதி என்பவரை தொடர்பு கொண்டு யோசனை கேட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மணிகம்ப் பாளையத்தை சேர்ந்த மணிக்கராஜ் அவருடைய மனைவி அசினா தனக்கு குழந்தை இல்லை என்று கேட்டுள்ளார், இது தொடர்பாக ராஜேஷின் வழிகாட்டுதலின்ப்படி ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு இந்த பச்சிளம் குழந்தை ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குழந்தை பாதுகாப்பு மையம் அதிகாரிகள் முத்து சுடலியிடம் விசாரணை மேற்கொண்ட போது குழந்தை இறந்து போய்விட்டது என்று தெரிவித்துள்ளனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சேத்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது குழந்தை விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட அசினா, சுடலி, ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர் குழந்தையை பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேலும் ஜெயபால் என்பவரை தேடி வருகின்றனர்.

The post விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district Rajapalayam ,Virudhunagar ,Rajapalayam ,Virudhunagar district ,Virudhunagar District Rajapalayam… ,
× RELATED விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது