×

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.453.67 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், 9 மாவட்டங்களில் 13 இடங்களில் 4,272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4,680பேருக்கு ரூ.98.28கோடி மதிப்பில் வீடுகள், ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் பயனாளிகள் பங்களிப்புடன் 72 நெசவாளர்களுக்கு வீடு, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு செய்துள்ளனர். திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறையில் கூட்டுறவு விற்பனை கிடங்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்கள் கூடிய ஏல மையங்கள், ஆய்வுக்கூடம், நகர கூட்டுறவுக்கடன் சங்கங்களுக்கான கட்டடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Urban Development Board ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...