×

நாகையில் பரபரப்பு: சாலையில் நடந்து சென்றவரை முட்டி தூக்கி வீசிய மாடு.. அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

நாகை: நாகையில் மாடு முட்டியதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்தாண்டு ஆட்டோவில் சென்ற ஓட்டுநர் நடந்து சென்ற முதியவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சூழலில், மேலும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது. நாகை – நாகூர் தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை, ரயில்வே நிலைய வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கண்டுகாணாமல் விடுகின்றனர்.

இதனால் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மேலகோட்டைவாசல் பகுதியை சேர்ந்த சபரிராஜன் என்பவர் வழக்கம் போல அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று சபரிராஜனை முட்டி தூக்கி வீசியுள்ளது. அச்சமயம் அங்கு வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சபரிராஜன் சிக்கிக் கொண்டார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாடு முட்டி இறந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து நாகை நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துகளும், உயிர் பலிகளும் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகையில் பரபரப்பு: சாலையில் நடந்து சென்றவரை முட்டி தூக்கி வீசிய மாடு.. அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,
× RELATED நாகை மாவட்டத்தில் சாலையில் நெல்லை...