×

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஐம்பெரும் விழா

 

தேவகோட்டை, நவ.20: தேவகோட்டை சடையன்காடு அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் தினம், நூல்கள் வெளியீடு, மூத்த உறுப்பினர்களுக்கு விருது வழங்குதல், வி.ஏ.ஓ தின புரவ லர்களுக்கு விருது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோரது படத்திறப்பு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. வி.ஏ.ஓ சங்க நிறுவனர் போசு தலைமை தாங்கினார்.

துரைராசு, காசிநாதன், கோபிநாத் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரவிரெங்கராசன் வரவேற்றார்.இதில் சங்கவாதியின் சரித்திரம் கிராம நிர்வாகத்தின் புரட்சி ஆகிய நூல்களை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வெளியிட்டார்.தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் மூத்த உறுப்பினர்களுக்கு விருது வழங்கினர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.டி.சோமசுந்தரம் படம் திறக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, தேவகோட்டை நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஐம்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Village Administrative Officers Association ,Devakottai ,Tamil Nadu Retired Village Administrative Officers Association ,Devakottai Sadayankadu ,
× RELATED சாலை விரிவாக்கம் செய்ய அளவீடு