×

கிருதுமால் ஓடை பாலங்களை உடனே சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

சிவகாசி, நவ.20: சிவகாசி நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களின் கழிவு நீர் கிருதுமால் ஓடை வழியாக செல்கிறது. இந்த ஓடை கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் கழிவு நீர் செல்ல வழியின்றி தெருக்களில் குளம் போல் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவி வருகிறது. சிவகாசி டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகம் முன்பு உள்ள கிருதுமால் ஓடையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் திருத்தங்கல் ரோடு நாடார் லாட்ஜ் அருகில் உள்ள கிருதுமால் ஓடையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலங்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் நான்கு கண் பாலமாக கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலங்கள் மண்மேவி தூர்ந்து கிடக்கிறது. பாலத்தின் உயரம் குறைந்து விட்டதால் மழை காலங்களில் பெருக்கெடுத்து வரும் கழிவு நீர் பாலத்தின் வழியே செல்ல முடியாமல் சாலைகளிலும், தெருக்களிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சிவகாசி பகுதியில் பலத்த மழை பெய்தால் சாலை முழுவதும் கழிவு நீர் கலந்து மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் அம்பேத்கார் சிலை அருகே உள்ள பாலம் சீரமைக்கும் பணி தொடங்க பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். எனவே பாலம் சீரமைப்பு பணிகள் முழுமையாக துவங்கும் முன் மாற்று பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருதுமால் ஓடை பாலங்களை உடனே சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kritumal stream ,Sivakasi ,Sivakasi Nagar ,Kritumal stream.… ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!