×

செங்கல்பட்டு அருகே விவசாய சங்கத்தினர் ஆலோசனை கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் ஊராட்சியில் பாலாற்று படுகை விவசாய முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் ஊராட்சியில் சேவை மைய அலுவலகத்தில் பாலாற்று படுகை விவசாய முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாலூர் பெரிய ஏரி மற்றும் நசித்தேரி நீரை பயன்படுத்தும் சங்க தலைவர் தலைமை தாங்கினார்.

இதில், நிரந்தமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாலாற்றின் குறுக்கே அணைகளை சீரமைக்க வேண்டும், பயிர் காப்பீட்டை முறைப்படுத்த வேண்டும், கால்நடை நோய்களை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும், விவசாயத்தை பாதுகாத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், பொதுப்பணி கால்வாய்களை தூர் வார வேண்டும் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரும் 24ம் தேதி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மனுவாக வழங்க இருப்பதாக, இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ரெட்டிபாளையம், பாலூர், வில்லியம்பாக்கம், மேலச்சேரி, வடபாதி, வடகால், திம்மாவரம், ஆத்தூர், சாஸ்தரம்பாக்கம், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டு அருகே விவசாய சங்கத்தினர் ஆலோசனை கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Palattu Padukai Agriculture Development Association ,Williampakkam Panchayat ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!