![]()
ஜெய்ப்பூர்: அரசியல் லாபங்களுக்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி நடக்கிறது. டிச.3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் மாநிலத்துக்கு வந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர்களின் மதிப்பை கெடுப்பதற்கு ஒன்றிய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது.சவாய் மதோப்பூர் தொகுதி வேட்பாளரும், பாஜ எம்பியுமான கிரோரி லால் மீனா அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பொய் புகார் அளித்துள்ளார். ஒன்றிய அமைப்புகள் அவருடைய பேச்சை கேட்டு செயல்படுகின்றன. இது பற்றி பொதுமக்களுக்கு தெரியும், தேர்தல் முடிவில் அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் தருவார்கள். ராஜஸ்தான் பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு பலமான ஆதரவு அலை வீசுகிறது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அவர்களிடம் அமலாக்கத்துறை உள்ளது. காங்கிரசிடம் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்(கேரன்டிகள்) உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒன்றிய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது: ராஜஸ்தான் முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

