×

சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

அரக்கோணம்: கேரள மாநிலம் சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களையொட்டி, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், மழை பாதிப்பு தொடர்பாகவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டு எடுத்து வருகிறது.

இந்நிலையில், அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் இருந்து மீட்புப் படைவீரர்கள் நேற்று கேரளாவிற்கு புறப்பட்டு சென்றனர். துணை ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையில் தலா 30 பேர் கொண்ட 2 குழுக்கள் என மொத்தம் 60 மீட்புப் படைவீரர்கள் ட்ரக் மூலம் சென்றனர். மேலும், ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள், கயிறுகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற பல்வேறு மீட்புக் கருவிகளுடன் சென்றுள்ளனர்.

The post சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Force ,Sabarimala ,Ayyappan ,Sabarimala, Kerala ,Mandal Pooja ,Makara Lampu ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு...