×

முதல்வரின் கான்வாய் வரும்போது பைக்கில் குறுக்கே புகுந்த இன்ஜினியருக்கு அபராதம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்துக்கு திரும்பினார். இதையொட்டி முதல்வர் சரியாக 1.35 மணிக்கு சி.பி.ராமசாமி சாலை பீம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே வரும் போது, சில நிமிடங்கள் முன்பு வாலிபர் ஒருவர் போலீசாரின் தடையை மீறி முதல்வர் கான்வாய் வரும் சாலையில் பைக்கில் மின்னல் வேகத்தில் சென்றார்.

இது குறித்து உதவி ஆய்வாளர் முருகேசன் சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்படி பிடிபட்ட வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர். அப்போது, அந்த வாலிபர் ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர் 7வது கிராஸ் தெருவைச் சேர்ந்த இன்ஜினியர் அஜய்குமார்(28) என தெரியவந்தது. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இன்ஜினியர் அஜய்குமாரை எச்சரித்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர் அனுப்பினர்.

The post முதல்வரின் கான்வாய் வரும்போது பைக்கில் குறுக்கே புகுந்த இன்ஜினியருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Chief Secretariat ,CM ,
× RELATED தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக அப்துல்சமத் எம்எல்ஏ தேர்வு