×

கொடுங்கையூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள விநாயகர் கோயிலின் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து ₹7 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை கொடுங்கையூர், விவேகானந்தர் நகர், வால்மீகி தெருவில்  செல்வ விநாயகர் கோயில் உள்ளது.

இக்கோயிலை அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் (48) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை மாதவன் கோயிலை திறக்க வந்திருந்தார். அப்போது விநாயகர் கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியானார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹7 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது மாதவனுக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மாதவன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிகளை ஆய்வு செய்து, கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கொடுங்கையூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vinayagar Temple ,Tyranpur ,Tyrannosaurs ,
× RELATED புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில்...