×

உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்: சோனியா காந்தி

டெல்லி: உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்; நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள். இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது, ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது” என இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

The post உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்: சோனியா காந்தி appeared first on Dinakaran.

Tags : World Cup Series ,Sonia Gandhi ,Delhi ,Australia ,World Cup ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ்...