×

வருசநாடு, க.மயிலாடும்பாறை பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

வருசநாடு, நவ. 19: ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பலநாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும், மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதனையடுத்து தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, க.மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், மீன்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தினர். இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த வியபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளை எச்சரித்தனர்.

The post வருசநாடு, க.மயிலாடும்பாறை பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayiladumpara ,Varusanadu ,Food Safety Department ,Antipatti ,Varusanadu, district ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...