×

ஒட்டன்சத்திரம் காப்பிலியபட்டி உரக்கிடங்கில் ஆய்வு செய்தார் அமைச்சர்

ஒட்டன்சத்திரம், நவ. 19: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்கழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தொடர்ந்து அமைச்சர், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கடைகள், குழந்தை வேலப்பர் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கிரிவலப்பாதை, மின் மயானம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வேதா, ஒன்றிய பொறியாளர் விஜயராகவன், நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியபிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி, ஊராட்சி மன்ற தலைவர் சிவபாக்கியம் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் காப்பிலியபட்டி உரக்கிடங்கில் ஆய்வு செய்தார் அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Kappiliyapatti ,Otanchatram ,Othanchatram ,Minister ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...