×

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கண்டக்டரை பீர்பாட்டிலால் தாக்கி மிரட்டல்

புதுச்சேரி, நவ. 19: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் தனியார் பேருந்து கண்டக்டரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக டைமிங் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (37). இவர் புதுச்சேரியில் ஒரு தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். புதுச்சேரி வில்லியனூரில் வசிக்கும் செல்வம் என்ற சட்டி செல்வம் (30) என்பவர் டைமிங் புரோக்கராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் சதீஷ் பணியிலிருந்த நிலையில், அவரது பேருந்து காலதாமதமாக புதிய பஸ் நிலையத்துக்குள் வந்துள்ளது. அதன்பிறகு பேருந்தை சதீஷ் தரப்பினர் உடனே எடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் பஸ் நிலையத்தில் நெருக்கடியில் சிக்கிய சதீஷ் பேருந்து காலதாமதமாக வெளியே வரவே, டைமிங் புரோக்கரான சட்டி செல்வம் இதை தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த சட்டி செல்வம், அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சதீசை சரமாரியாக தாக்கினாராம். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சட்டி செல்வம் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.இதுதொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார். எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே புரோக்கர் சட்டி செல்வத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கண்டக்டரை பீர்பாட்டிலால் தாக்கி மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...