×

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் நிலங்கள் அளவீடு பணி

 

அரியலூர்,நவ.19: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பொருட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நில அளவையர்கள் நியமனம் செய்யப்பட்டு, நவீன நில அளவை கருவிகளை கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், அரியலூர் மாவட்டத்தில் இதுவரை பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 2641.52 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. தற்போது அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி வரதராச பெருமாள் கோயில் நிலங்கள் அளவீடு பணி நடைபெற்று வருகிறது என ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதனிடையே கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் நிலங்கள் அளவீடு பணி appeared first on Dinakaran.

Tags : Kallangurichi Kaliyuga Varadarasa Perumal temple ,Ariyalur ,Kallangurichi Kaliugavaradarasa Perumal temple ,Kallangurichi ,Kaliyuga Varadarasa Perumal ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...