×

ரூ14 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.மஞ்சளை ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யாறு, தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் குவிண்டால் ₹9874 முதல் ₹13,169 வரையும், கிழங்கு மஞ்சள் ₹8794 முதல் ₹10,999 வரையும் விற்பனையானது. மொத்தம் 207 மூட்டைகள் ₹14 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ரூ14 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Manjalai Jaderpalayam ,Cholasiramani ,Thiayamangalam ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்