×

புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் ஆய்வு

தர்மபுரி, நவ.19: தர்மபுரியில் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் பொன்.குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தர்மபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 766 மையங்களில், 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 766 தன்னார்வலர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.

இந்த கற்போர் மையங்களில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் பொன்.குமார் பார்வையிட்டார். அப்போது, புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை, கே.ஆலங்கரை மற்றும் பலா மரத்துக்கொட்டாய் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, இணை இயக்குனர், எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தெரிந்து கொள்வதால் ஏற்படும் பயன்களை பற்றி விரிவாக கற்போரிடம் எடுத்துரைத்தார். அப்ேபாது, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார், துணை ஆய்வாளர் பொன்னுசாமி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bharat ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை