×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை: சிபிஐ அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள்

ஒடிசா: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிசாவில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, அவர்கள் தொடர்பான படங்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்டவை சம்மந்தமாக நாடு முழுவதும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் மொத்தம் 83 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.தமிழ்நாட்டில் திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சேலம் மாவட்டம் காட்டுமரம்குட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞரிடம் 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பெங்களுருவில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் அந்த இளைஞர் ஆன்லைன் மூலம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் டெல்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஒடிசா மாநிலம் டேங்கனால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை சிபிஐ அதிகாரிகள் 5 பேர் சோதனையிட சென்ற போது அங்குள்ள மக்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற உள்ளூர் போலீசார் கிராம மக்களிடம் இருந்து சிபிஐ அதிகாரிகளை மீட்டனர். மொத்தம் 76 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை: சிபிஐ அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : CBI ,Odisha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...