×

விவரம் தெரியாமல் அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் கிண்டல்

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி: முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தோம். மீன் வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதையும் கவர்னர் திருப்பி அனுப்பி இருக்கிறார். மீண்டும் ஜெயலலிதா பெயருடன் தான் அந்த சட்ட மசோதா மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுவும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

ஆனால், இந்த விவரம் கூட தெரியாமல் அவர்கள் (அதிமுக) வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே பரஸ்பர உணர்வு, தொடர்பு இருப்பது தான் நல்லது. அது தான் நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள், மாலை போட்டு இருக்கிறீர்களா? காவி ஆடை அணிந்து இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘இதயத்தில் கொடி இருக்கு, சின்னம் இருக்கு. அதை யாராலும் அழிக்க முடியுமா? இருக்க கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா?’ என்றார்.

The post விவரம் தெரியாமல் அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...