×

மீன்வள பல்கலை பெயர் விவகாரம் எடப்பாடிக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு பெயர் மாற்றியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர். விவாதத்தின் போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்த பின்னர், அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘திருவாரூரில் கலைஞர் அரசு கலைக்கல்லூரி என்ற பெயரை நீக்கியது, அதிமுக ஆட்சியில் தான் என்பதால் இந்த குற்றச்சாட்டை கூற அவர்களுக்கு தகுதி இல்லை’ என்றார்.

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றியதாக கூறியுள்ளனர். அந்த பெயரை மாற்றவில்லை. இன்னும் அதற்கு கவர்னர் அனுமதி தரவில்லை. இந்த 10 மசோதாக்களில் அதுவும் ஒன்று என்று சபாநாயகர் குறிப்பிட்டார். அவை முன்னவர் துரைமுருகன்: ‘வெளிநடப்பு நோக்கம் அதுவல்ல. பாஜவில் இருந்து வெளியே வந்துவிட்டாலும் உள்ளூர ஒரு நீரோட்டம் உள்ளது. கவர்னரை எதிர்ப்பது, பிரதமர் மோடியை, பாஜகவை எதிர்ப்பது போலாகிவிடும். எனவே, இல்லாத காரணத்தை கூறிவிட்டு சென்றுள்ளனர்’ என்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: ‘எந்த பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை. எந்த பெயரில் உள்ளதோ அதே பெயர் தான் இப்போதும் உள்ளது’ என்று குறிப்பிட்டார். (அவைக்கு வெளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளிக்கும் போது, ‘மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டு இருந்ததாகவும், அதை திமுக அரசு நீக்கியதாகவும் அவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதாக கூறியிருந்தார்.)

The post மீன்வள பல்கலை பெயர் விவகாரம் எடப்பாடிக்கு அமைச்சர்கள் பதில் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Fisheries University ,Chennai ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை...