×

பிளஸ் 1 மாணவி கர்ப்பம் பிளஸ் 2 மாணவன் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தந்தை விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சி பெறுவதற்காக நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் வந்து செல்வது வழக்கம். இதனால் பயிற்சியாளரின் குடும்பத்தினருடன் மாணவன் நெருக்கமானான். அந்த வகையில் பயிற்சியாளரின் மகளான மாணவியும், மாணவனும் காதலித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதன்பின் மாணவி வயிறு வீங்கி இருப்பதாகவும், அவ்வப்போது வயிற்றுக்குள் ஏதோ வலி இருப்பதாகவும் கூறவே, நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றார். அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பம் என தெரியவந்தது. இது குறித்து தாய் விசாரித்தபோது மாணவன்தான் காரணம் என கூறியுள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து போக்சோ வழக்கு பதிந்து, பிளஸ் 2 மாணவனை கைது செய்தனர்.

The post பிளஸ் 1 மாணவி கர்ப்பம் பிளஸ் 2 மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kottar ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...