×

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியை மாற்றியது ஏற்றுக் கொள்ள முடியாது: மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியை மாற்றியது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்குவங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் நடந்த ஜகதாத்ரி பூஜையில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘ஒன்றிய பாஜக அரசு, நாடு முழுவதும் காவி வர்ணம் பூச முயற்சிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியின் (வீரர்களின் உடை) நிறத்தை மாற்றியது ஒரு அரசியல் நடவடிக்கையாக பார்க்கிறேன். விளையாட்டை காவி நிறமாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமையடைகிறோம். அவர்கள் உலகக் கோப்பையில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். வீரர்களுக்கு ஜெர்சி நிறத்தை மாற்றியது போன்று, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு காவி வர்ணத்தை பூசியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேசமானது, நாட்டு மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு ெசாந்தமானது அல்ல’ என்று கூறினார். மம்தாவின் கருத்து குறித்து மேற்குவங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா ​​கூறுகையில், ‘இன்னும் கொஞ்சம் நாட்களில், தேசியக் கொடியில் காவி நிறம் எதற்கு? என்று கேள்வி எழுப்புவார்கள். அவர்களின் பேச்சுக்கு எதிர்வினையாற்றுவது பொருத்தமானதாக இருக்காது’ என்று கூறினார்.

The post இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியை மாற்றியது ஏற்றுக் கொள்ள முடியாது: மம்தா பானர்ஜி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjee ,Kolkata ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்...