×

மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதே நிராகரிக்கப்பட்டதற்குச் சமம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதே நிராகரிக்கப்பட்டதற்குச் சமம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ நேரடியாக Rejection என்று தெரிவிப்பதில்லை. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர், ஆளுநர் குறிப்பிடுவது நிராகரிக்கப்பட்டது என்பதை ஒன்றிய அரசின் வழக்கறிஞரே கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் நீட்விலக்கு மசோதாவையும் With Held எனக் குறிப்பிட்டே திருப்பி அனுப்பப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் Withheld என்று குறிப்பிட்டுள்ளதால் அந்த மசோதா நிலுவையில் இருப்பதாகவே அர்த்தம் என்று முன்னதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

The post மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதே நிராகரிக்கப்பட்டதற்குச் சமம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Thangam Southern ,Edappadi Palaniswami ,CHENNAI ,Thangam Thanaras ,Tangam Tanaras ,Edappadi Palanisamy ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...