×

நடிகை விஜயசாந்தி காங்கிரசின் பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

ஹைதராபாத்: நடிகை விஜயசாந்தி காங்கிரசின் பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமா துறைக்கு பிறகு அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். எம்பி ஆகவும் இருந்த விஜயசாந்தி கடைசியாக பாஜகவில் தொடர்ந்து இருந்து வந்தார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருந்து ஆர்வம் காட்டாமல் இருந்த விஜயசாந்தி தெலுங்கானாவில் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக விஜயசாந்தி பாஜகவில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை, மேலும் நட்சத்திர பேச்சாளருக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு வெளியிடப்படவில்லை. இதனால் பாஜக மீது அதிருப்தியில் இருந்த விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நடிகை விஜயசாந்தி, தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

The post நடிகை விஜயசாந்தி காங்கிரசின் பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Vijayashanti ,Chief Coordinator ,Congress Advocacy Committee ,Hyderabad ,Vijayasanti ,Congress ,
× RELATED காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன...