×

வ.உ.சிதம்பரனாரின் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் டுவீட்..!!

சென்னை: வ.உ.சிதம்பரனாரின் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம் என முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது,

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்!

தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்! என குறிப்பிட்டுள்ளார்.

The post வ.உ.சிதம்பரனாரின் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் டுவீட்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,V.U.Chitambaranar. ,M.K.Stalin ,Chennai ,V.U.Chitambaranar ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...