×

சானாவூரணி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

 

காளையார்கோவில், நவ. 18: காளையார் கோவில் கால்நடை மருந்தகம் சார்பில் சானாவூரணி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமை காளையார்கோவில் சூசையப்பர் பட்டிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார் பதிவாளர் வினோதினி பிரியா துவங்கி வைத்தார். இம்முகாமில் காளையார்கோவில் கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர் சிலம்பரசன், செயற்கை முறை கருவூட்டல் காமராஜ், பராமரிப்பு உதவியாளர் மனுவேல் ஆகியோர் கலந்துகொண்டு 75க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். இம்முகாமில் கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர் கலைசெல்வம், சானாவூரணி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர் அருமைநாதன், தலைவர் சவரிமுத்து, குழந்தைசாமி மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சானாவூரணி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Sanavoorani Village ,Kalayarkovil ,Komari ,Kalaiyar temple ,Dinakaran ,
× RELATED 5 பேரை வெட்டி 50 சவரன் கொள்ளை