×

காஞ்சிபுரத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ₹11.15 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், நவ.18: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், ₹11.15 கோடி மதிப்பீட்டில் 1,823 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, கூட்டுறவு சங்கங்களின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பயனாளிகளுக்கு ₹40.41 லட்சம் மதிப்பில் பயிர்க்கடன், 137 பயனாளிகளுக்கு ₹48.72 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன், 74 பயனாளிகளுக்கு ₹26.26 லட்சம் மீன்வளர்ப்ப்பு கடன் வழங்கினார்.

அதேபோல், 25 பயனாளிகளுக்கு ₹18.82 லட்சம் மதிப்பில் மத்திய கால கடன் (விவசாயம்), 7 பயனாளிகளுக்கு ₹2.75 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன், 7 பயனாளிகளுக்கு ₹1.75 லட்சம் மதிப்பில் விதவை, ஆதரவற்றவர் கடன், 1363 பயனாளிகளுக்கு ₹8.66 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு (103 குழுக்கள்) கடன், 29 பயனாளிகளுக்கு ₹14.50 லட்சம் மதிப்பில் மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்கினார். மேலும், 6 பயனாளிகளுக்கு ₹7.50 லட்சம் மதிப்பில் உழைக்கும் மகளிர் கடன், 18 பயனாளிகளுக்கு ₹9 லட்சம் மதிப்பில் முத்ரா கடன், 61 பயனாளிகளுக்கு ₹19.45 லட்சம் மதிப்பில் சிறுவணிக கடன், 7 பயனாளிகளுக்கு ₹3.50 லட்சம் மரிப்பில் டாம்கோ கடன், 10 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் டாப்செட்கோ கடன், 6 பயனாளிகளுக்கு ₹36 லட்சம் மதிப்பில் வீட்டு அடமான கடன், 17 பயனாளிகளுக்கு ₹14.90 லட்சம் மதிப்பில் பண்ணைசாரா கடன் என மொத்தம் 1823 பயனாளிகளுக்கு ₹11.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து, மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வாங்கினார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கம் தொடக்கம் இந்தியாவிலேயே முதன் முதலாக 1904ல் காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியும், திருவூரில் கூட்டுறவு வங்கியும் தொடங்கப்பட்ட பெருமை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேரும். இதில் காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அண்ணா முதல் முதலில் உறுப்பினரான பெருமை பெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2023-24ல், இதுவரை 5041 விவசாயிகளுக்கு ₹37 கோடியே 28 லட்சம் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் தள்ளுபடி தமிழக முழுவதும் ₹2531 கோடி மதிப்பிலான பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,515 விவசாயிகள் வாங்கிய ₹81.41 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி தமிழக முழுவதும் 1 லட்சத்து 17,617 மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய ₹2,756 கோடி கடன் தள்ளுபடியால், 15 லட்சத்து 88 ஆயிரத்து 399 மகளிர் பயனடைந்தனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1451 மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய ₹37.38 கோடி கடன் தள்ளுபடியால் 18,090 மகளிர் பயனடைந்தனர்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 5 சவரன் வாயிலாக நகை கடன் தள்ளுபடி தமிழக முழுவதும் 14,60,000 ஏழை, எளிய மக்கள் வாங்கிய ₹5,250 கோடி நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ₹60.48 கோடி தள்ளுபடியால் 18,443 ஏழை, எளிய மக்கள் பயனடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக 3 லட்சத்து 66,347 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2 தவணையாக மொத்தம் ₹4,000 உதவித்தொகை வீதம் 2021-22ம் ஆண்டில் ₹145 கோடியே 31 லட்சத்து 28,000 மதிப்பில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவளார் முருகன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

பட்டா வழங்க மனுக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் நத்தம் மற்றும் கல்லாங்குத்து மனைகளில் ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டவர்கள் மற்றும் பட்டா வழங்காமல் விடுபட்ட நபர்களிடம் இருந்து பட்டா வழங்குவதற்கான மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை மறைமலைநகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, பட்டா வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து, தகுதியான நபர்களுக்கு வரும் 23ம் தேதி மறைமலைநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இதில், நகரமன்ற தலைவர்கள் சண்முகம், எம்கேடி.கார்த்திக் தண்டபாணி, தேன்மொழி நரேந்திரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகரமன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ₹11.15 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : 70th All India Co-operative Week ,Kanchipuram ,Minister ,T. Mo. Anparasan ,70th All India Cooperative Week ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...