×

காஞ்சி, செங்கையில் தொடர் மழையால் 127 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், நவ.18: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் உள்ளன. இதில் மேற்கூறிய 45 ஏரிகள் 100 சதவீதமும், 29 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பியது. மேலும், 61 ஏரிகள் 50 சதவீதமும், 175 ஏரிகள் 25 சதவீதமும் எட்டியுள்ளன. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 82 ஏரிகள் 100 சதவீதமும், 129 ஏரிகள் 75 சதவீதமும், 170 ஏரிகள் 50 சதவீதமும், 121 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதில், சென்னை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனமாகவும் விளங்கக்கூடிய பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

The post காஞ்சி, செங்கையில் தொடர் மழையால் 127 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Senkai ,Kanchipuram ,Chennai ,Chengalpattu ,Kanchi, ,
× RELATED காஞ்சியில் லேசான மழை