×

மரங்களை வெட்டியதாக புகார் ஊராட்சி தலைவரை கண்டித்து மறியல்

விருதுநகர், நவ.18: விருதுநகர் அருகே மரங்களை வெட்டியதாக ஊராட்சி தலைவரை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சி அய்யனார் நகர் பிரதான தெருவில் ரோடு போடும் பணிக்கான ஊராட்சி தலைவர் அழகம்மாள் உத்தரவில் 16 மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து வார்டு உறுப்பினர் செல்வி தலைமையில்பாவாலி ரோடு, டிடிகே ரோடு சந்திப்பில் மரங்களை போட்டு மக்கள் மறியல் செய்தனர்.தகவல் அறிந்து வந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர். மறியால் 20 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மரங்களை வெட்டியதாக புகார் ஊராட்சி தலைவரை கண்டித்து மறியல் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Virudhunagar ,Bawali ,Dinakaran ,
× RELATED கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்தில்...