×

தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை: சீர்காழி நகராட்சி ஆணையர் மும்முரம்

 

சீர்காழி,நவ.18: சீர்காழி பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடி நகராட்சி ஆணையர் ஹேமலதா நடவடிக்கை எடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மழை தேங்கிய இடங்களை பார்வையிட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நகராட்சிக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியன் நகரில் சாலையில் தேங்கிநின்ற மழைநீர் பகுதிகளை பார்வையிட்டு நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் பொக்லேன் இயந்திரத்தை பயன்படுத்தி அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதே போல் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் இரு புறங்களில் அமைந்துள்ள மண்மேடுகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை: சீர்காழி நகராட்சி ஆணையர் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Municipal Commissioner ,Acting Municipal Commissioner ,Hemalatha ,Dinakaran ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...