×

கார்த்திகை 1ம் தேதியையொட்டி ஈரோட்டில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

 

ஈரோடு, நவ. 18: கார்த்திகை ஒன்றாம் தேதியையொட்டி ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.  சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோயிலுக்கு செல்வது வழக்கமாகும். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகளுக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் நேற்று கார்த்திகை 1ம் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் நிலவியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா நிறுவனம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

The post கார்த்திகை 1ம் தேதியையொட்டி ஈரோட்டில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Erode ,Karthika 1st ,Kartika 1st ,Kartika ,1 ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது