×

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்

 

திருப்பூர், நவ.18: மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில் 27.10.2023 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது.

சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதில் இருந்து 29 வயதான இளம் வாக்காளர்களிடமிருந்து நேற்று வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் 9.12.2023 உடன் முடிவடைய உள்ளதால் வாக்காளர் பட்டியில் பெயர் இடம் பெறாத 18 வயதுக்கு மேல் நபர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 நேரிலோ அல்லது இணையதளம் வாயிலாகவோ அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,District Collector ,Kristaraj ,Election Commission of India ,Chennai ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு