×

ஒரே தூக்கில் வடமாநில காதல் ஜோடி தற்கொலை

குமாரபாளையம்: ஒடிசா மாநிலம், கோராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிம்பூ மஜ்கி(22). இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் உள்ள நூற்பாலையில், கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரது அறையில் அருகே தங்கியிருந்த பீகார் மாநிலம், ராசிட்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோமல்குமாரி (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதற்கு கோமல்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள், நேற்று அதிகாலை அறையிலிருந்து ரகசியமாக வெளியேறி கோமல்குமாரி அணிந்திருந்த துப்பட்டாவில், இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஒரே தூக்கில் வடமாநில காதல் ஜோடி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Thimphu Majki ,Korapur district, Odisha ,Namakkal District, ,
× RELATED அரசு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம்