×

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு

மாலே: மாலத்தீவின் 8வது அதிபராக முகமது முய்சு (45) நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாலத்தீவின் தலைமை நீதிபதி முதாசிம் அட்னன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மாலத்தீவு துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப்பும் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

தெற்காசிய நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னதாக, மாலத்தீவுடன் இருதரப்பு உறவுகளை ஆக்கப்பூர்வமாக எடுத்து செல்லும் வகையில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மகாவர் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியை முகமது முய்சுவிடம் நேரடியாக அளித்தார்.

The post மாலத்தீவு அதிபர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : President of ,Maldives ,Mohamed Muisu ,8th President of Maldives ,Chief Justice of ,Mudassim ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!!