×

நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்

ராம்பூர்: 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நடிகை ஜெயப்பிரதா பா.ஜ வேட்பாளராக ராம்பூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் ஒரு சாலையை அவர் திறந்து வைத்தார். இது தொடர்பாக அங்குள்ள ஸ்வார் காவல்நிலையத்தில் நடிகை ஜெயபிரதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி ராம்பூர் சிறப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஷோபித் பன்சால் உத்தரவிட்டார். ஆனால் ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

The post நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Jayapratha ,Rampur ,2019 Lok Sabha elections ,BJP ,Jayaprada ,
× RELATED தேர்தல் விதிமுறை மீறல் நடிகை ஜெயபிரதாவை கைது செய்ய உத்தரவு