×

மின்சார திருட்டு புகாரில் ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்திய குமாரசாமி

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு சொந்தமான வீடு பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் அவரது வீடு முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனிடையில் அவரது வீட்டில் போடப்பட்டிருந்த மின் விளக்கு அலங்காரத்திற்கு எங்கிருந்து மின்சாரம் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்தது. இது குறித்து பெஸ்காம் நிறுவனம் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது. அனுமதி பெறாமல் மின்சாரம் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட ரூ.68 ஆயிரம் அபராத தொகையை குமாரசாமி நேற்று செலுத்தினார்.

The post மின்சார திருட்டு புகாரில் ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்திய குமாரசாமி appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,Bengaluru ,Chief Minister ,Karnataka ,Janata Dal ,JP Nagar, Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு...