×

ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கு உ.பி., முன்னாள் எம்எல்ஏவின் ரூ.72 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: உபி முன்னாள் எம்எல்ஏ வினய் சங்கர் திவாரிக்கு சொந்தமான ரூ.72 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. உத்தரபிரதேசமாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹரிசங்கர் திவாரியின் மகன் வினய் திவாரி. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சில்லுபார் தொகுதியில் எம்எல்ஏவாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் அவர் இணைந்தார். வினய்திவாரி மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கங்கோத்ரி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.1129 கோடி கடன் வாங்கியதில் ரூ.754.24 கோடி வங்கிக்கு இழப்பீடு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படை வினய் சங்கர் திவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

The post ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கு உ.பி., முன்னாள் எம்எல்ஏவின் ரூ.72 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : UP ,MLA ,New Delhi ,The Enforcement Directorate ,Vinay Shankar Tiwari ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...