×

ம.பி.யில் தேர்தலுக்கு முன் மதுபான விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த 3 நாட்களில் மதுபான விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அதனை தொடர்ந்து வந்த தேர்தல் காரணமாக 3 நாட்களில் மாநிலத்தில் மதுபான விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் தகவலின்படி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட கடந்த 13ம் தேதி உள்நாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான வகைகள் அனைத்தையும் சேர்த்து 8,67,282 லிட்டர் விற்பனையாகி உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் 9,17,823 மற்றும் 8,81,550 லிட்டரும் விற்பனையாகி உள்ளது. தேர்தலை முன்னிட்டு புதனன்று மாலை 6 மணியுடன் மதுபான கடைகள் 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டன. இந்நிலையில் அதற்கு முன்பாக மாநிலத்தில் மதுவிற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

The post ம.பி.யில் தேர்தலுக்கு முன் மதுபான விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Madhya Pradesh ,Madhya Pradesh… ,Dinakaran ,
× RELATED ம.பி.யில் டிராக்டர், பேருந்து மோதி 16 பேர் காயம்