×

திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக பாஜ எம்பி மகன் மீது இளம்பெண் புகார்: வழக்கு பதிவு செய்த போலீசார், விரைவில் கைதாக வாய்ப்பு

பெங்களூரு: பல்லாரி தொகுதி பாஜ மக்களவை உறுப்பினர் தேவேந்திரப்பாவின் மகன் மீது இளம் பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். பெங்களூரு பசவனகுடி போலீஸ் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகாரில், மைசூரு மாநகரில் உள்ள மகாராஜ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் பல்லாரி தொகுதி பாஜ மக்களவை தொகுதி உறுப்பினர் தேவேந்திரப்பாவின் மகன் ரங்கநாத் என்னை காதலித்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மைசூரு மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கி இருந்தபோது, மது குடித்த போதையில் இருந்த ரங்கநாத், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் பாலியல் உறவில் ஈடுபட ஒப்பு கொண்டேன்.ஆனால் ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். அவரின் புகாரை ஏற்று ரங்கநாத் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 417, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டினார்.

இதற்கிடையே ரங்கநாத் மைசூரு விஜயநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், என்னுடன் இருந்த போட்டோ மற்றும் ஆடியோவை வைத்து கொண்டு இளம்பெண், என்னிடம் ரூ.15 லட்சம் கொடுக்கும்படி மிரட்டினார். அவரின் மிரட்டலுக்கு பணிந்து, எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3,25,500 பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன். இருப்பினும் ரூ.10 லட்சம் கொடுத்தால் மீண்டும் தொல்லை கொடுக்க மாட்டேன் என்றார். அதை நம்பி பணம் கொடுத்தேன். இருப்பினும் தொல்லை கொடுப்பதுடன் எனது சாதி பெயரை சொல்லி கேவலப்படுத்தியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

The post திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக பாஜ எம்பி மகன் மீது இளம்பெண் புகார்: வழக்கு பதிவு செய்த போலீசார், விரைவில் கைதாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,BJP Lok Sabha ,Devendrappa ,Ballari ,
× RELATED பாஜ மீதான அவதூறு விளம்பரம் ராகுல்...