×

2.5 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.200 கோடி சுருட்டல்: ஒடிசாவில் ‘கிரிப்டோ’ ஆசாமிகள் 3 பேர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா புவனேஸ்வரில் ‘கிரிப்டோ-போன்சி’ டிஜிட்டல் மோசடி மூலம் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி ரூ.200 கோடி பணத்தை சுருட்டிய 3 பலே ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர். பெரிய ஓட்டல்களில் மீட்டிங் நடத்தி சிறிய முதலீடு குறுகிய காலத்தில் பல மடங்காக பெருகும் என்று ஆசை காட்டி அப்பாவி மக்களை மயக்கி உள்ளனர்.

பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானா, குஜராத், பீகார், ஜார்க்கன்ட் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 2.5 லட்சம் மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி சுருட்டியுள்ளனர். முதலீட்டாளர்களில் ஒருவர் ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார். அதை விசாரித்த போலீசார் மோசடியில் தொடர்புடைய ஒரு ஆசாமி துபாய்க்கு தப்ப முயன்றபோது பிடித்தனர். மற்ற இருவரை புவனேஸ்வரில் மடக்கி பிடித்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடக்கிறது.

The post 2.5 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.200 கோடி சுருட்டல்: ஒடிசாவில் ‘கிரிப்டோ’ ஆசாமிகள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Odisha Bhubaneswar ,Odisha ,Dinakaran ,
× RELATED பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு