×

சென்னை, பெங்களூருக்கு டிச. முதல் வேலூரில் இருந்து விமான சேவை: சென்னையில் இருந்து தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கும் பறக்கலாம்

வேலூர்: ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் வேலூர் விமான நிலையம் உட்பட கைவிடப்பட்ட சிறிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் 2017ம் ஆண்டு தொடங்கியது. இதில் ரூ.65 கோடியில் வேலூர் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் 2018ம் ஆண்டு இந்த ஆண்டு மத்தியில் முடிந்துள்ளது. முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் முதல் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது.

அதற்கேற்ப விமான நிலைய சுற்றுச்சுவர் பணிகளும், சிசிடிவி கேமரா பொருத்தும் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்து விமான நிலையம் முழு அளவில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர்டாக்ஸி நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் வேலூரில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கு விமானங்கள் இயக்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர்- பெங்களூரு, பெங்களூரு- வேலூர், சென்னை- வேலூர், வேலூர்- சென்னை, சென்னை- நெய்வேலி, நெய்வேலி- சென்னை, ஹூப்பள்ளி- பெங்களூரு, பெங்களூரு-ஹூப்பள்ளி, பெங்களூரு- தஞ்சாவூர், தஞ்சாவூர்- பெங்களூரு, சென்னை- தஞ்சாவூர், தஞ்சாவூர்- சென்னை, சென்னை- ராமநாதபுரம், ராமநாதபுரம்- சென்னை, புவனேஷ்வர்-அமர்தா, அமர்தா- புவனேஷ்வர், டால்டன்கஞ்ச்- ராஞ்சி, ராஞ்சி- டால்டன்கஞ்ச், டால்டன்கஞ்ச்- பாட்னா, பாட்னா- டால்டன்கஞ்ச், மால்டா- கொல்கத்தா, கொல்கத்தா-மால்டா ஆகிய வழித்தடங்களில் டிசம்பர் முதல் விமான சேவை தொடங்கப்பட்ட உள்ளது’ என்று கூறி உள்ளது.

இதுதொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து உயர்மட்டக்குழு இறுதியாக வேலூர் விமான நிலையத்தை பார்வையிட வர உள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்தவுடன், விமான சேவைக்கான உரிமம் கிடைத்துவிடும். விமான நிலையத்தை பொறுத்தவரை தற்போது போக்குவரத்துக்கு தயார் நிலையிலேயே உள்ளது’ என்றனர்.

The post சென்னை, பெங்களூருக்கு டிச. முதல் வேலூரில் இருந்து விமான சேவை: சென்னையில் இருந்து தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கும் பறக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Vellore ,Thanjavur ,Neyveli ,Ramanathapuram ,Union Government ,Bengaluru ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்