×

அனைத்து மாவட்டங்களிலும் சிறிய அளவில் ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி தகவல்

கோவை: கோவை அவினாசி சாலை நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து 2 நாள் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு நடத்தியது. இதில், 2-வது நாளான நேற்று நடந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்து பேசுகையில், ‘மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.881 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா துவங்கப்படவுள்ளது’ என்றார். பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.2.5 கோடி மதிப்பில் ஒரே இடத்தில் 3 தொழிற்கூடங்கள் அமைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 110 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த ஒருவரின் விண்ணப்பம் உள்பட 10 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து மாவட்டங்களிலும் சிறிய அளவில் ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Gandhi ,Coimbatore ,Coimbatore Avinasi Road ,Tamil Nadu Government Textile Department ,Union Government Textile Department ,Dinakaran ,
× RELATED மோடிக்கு காந்தி தேசப்பிதா கோட்சே...