×

மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 73.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன: தேர்தல் ஆணையம்!

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 73.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 70.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில் ஏற்கனவே முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 70 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

 

The post மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 73.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன: தேர்தல் ஆணையம்! appeared first on Dinakaran.

Tags : Madhya ,Pradesh assembly elections ,Election Commission ,Madhya Pradesh ,assembly elections ,
× RELATED பாஜவிற்கு கமல்நாத் தேவையில்லை: ம.பி. அமைச்சர் கருத்து