×

சேலம் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம்..!!

சேலம்: சேலத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் தலைவாசல் பகுதியில் ஏறிய பயணி ஒருவருக்கு 2 நூறு ரூபாய் டிக்கெட்கள் 2 பத்துரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

அப்போது தலைவாசல் அருகே உமங்கலம் என்ற பகுதியில் விழுப்புரம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்தபோது அங்கிருந்த பயணிகள் வைத்திருந்த டிக்கெட் ஆனது மறுவிற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.  பயணப்பட்டியலில் இல்லாத அந்த தேதியில் இருக்கக்கூடிய டிக்கெட்டுகள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து விசாரணை நடத்தியதில் பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை மாறாக பயணப்பட்டியலில் இல்லாத ஏற்கனவே இதே நடத்துனரால் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மறு விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் நேரு என்பவர் சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் பொன்முடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்ததை மீண்டும் எப்படி அவர் கைக்கு வந்தது. அதை மீண்டும் எப்படி பயணிகளுக்கு விற்பனை செய்தார் என்ற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. போலி டிக்கெட் என்ற விஷயத்தை முற்றிலுமாக போக்குவரத்து கழக அதிகாரிகள் மறுத்துள்ளனர். மறுவிற்பனை செய்த டிக்கெட் என்ற அடிப்படையிலேயே தற்போது நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post சேலம் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Salem government ,Salem ,Chidambaram ,Dinakaran ,
× RELATED தென்காசியில் காதல் மனைவி தூக்கிட்டு...