×

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவுக்காக மரத்தை தள்ளியபோது மின்சாரம் தாக்கி யானை பலி..!!

 

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவுக்காக மரத்தை தள்ளியபோது மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று இரவு 2 ஆண்யானைகள் வனப்பகுதியிலிருந்து உணவு தேடி புளியம்பாறை பகுதிக்குள் நுழைந்தது.

இன்று காலை இரண்டு யானைகளும் ஊருக்குள் இருந்து வனப்பகுதிக்கு திரும்பும் பொழுது தனியார் சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த மரத்தை சாய்த்தது அந்த மரம் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்து மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையின் உடலை பிரேதபரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவுக்காக மரத்தை தள்ளியபோது மின்சாரம் தாக்கி யானை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Puliyampara ,Kudalur ,Nilgiri ,Puliyamparai ,Nilgiris district ,Nilgiris… ,Nilgiris ,
× RELATED அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை