×

தொடர் மழையால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் பாதிப்பு: உரிய மகசூல் கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள்

தேனி: தேனி மாவட்டம் போடி பகுதியில் தொடர் மழையால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போடி மற்றும் அதான் சசுற்றுப்புற கிராம பாகுதிகளான பத்ரகாளி புரம், விச்வாசபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயம் விளைந்து அறுவடையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கண்மாய்கள், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் தாக்கி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றிக்கு ரூ.80 முதல் ரூ.90 வரை வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர். இருப்பினும் வெங்காயத்தில் அழுகல் நோய் காரணமாக உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

 

 

The post தொடர் மழையால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் பாதிப்பு: உரிய மகசூல் கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Theni ,Bodi ,Theni district ,Dinakaran ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...