×

புறாக்களுக்கு கருணை காட்டும் ஜெய்ப்பூர்வாசிகள்; புறாக்களுக்கு உணவளித்தால் நல்லது நடக்கும் என நம்பிக்கை..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் நகர மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறாக்களுக்கு உணவளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது ஸ்டாஷு சர்க்கல் பகுதி. இப்பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறாக்கள் வந்து செல்கின்றன. அப்படி வரும் புறாக்களுக்கு நாள்தோறும் உணவளிப்பதை அன்றாட பணிகளில் ஒன்றாகவே அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். புறாக்களுக்கு உணவு அளிப்பது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

சக மனிதர்கள் மீது கூட அன்பு காட்ட தயங்கும் மனிதர்கள் மத்தியில், புறாக்களுக்கு கருணை காட்டும் மனிதனின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள ஒருவர் கூறியதாவது, தினமும் காலையில் Good Morning சொல்வதைப் போல இதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளேன். புறாக்களுக்கு இவ்வாறு செய்வதால் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலவுகிறது. தினசரி பழக்கமாகவே இது எங்களுக்கு மாறி விட்டது என்றார்.

மற்றொருவர் கூறுகையில், மக்கள் இங்கு வந்து புறாக்களுக்கும், மற்ற பறவைகளுக்கும் தானியங்களை வழங்குகிறார்கள். புறாக்களுக்கு உணவு கிடைப்பது கடினமானது. குரங்குகளுக்கு கூட உணவு கிடைத்து விடும். எனவே மக்கள் நாள்தோறும் இங்கு வந்து உணவளிக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

The post புறாக்களுக்கு கருணை காட்டும் ஜெய்ப்பூர்வாசிகள்; புறாக்களுக்கு உணவளித்தால் நல்லது நடக்கும் என நம்பிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Jaipur, Rajasthan ,Rajasthan ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு