×

மனைவி, மாமியாரை வெட்டிய வழக்கில் கைது ஜாமீனில் வெளியே வந்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

தூத்துக்குடி, நவ. 17: தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே உள்ள ரயில் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் கொடுத்த தகவலின்பேரில் ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ முருகன் விசாரணை செய்தார். அப்போது இறந்தவர், தூத்துக்குடி 3வது மைல், திரு.வி.க.நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன்(49) என்பது தெரிய வந்தது. சுப்பிரமணியன் கடந்த 2022 ஏப்ரல் 20ம் தேதி, அவரது மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டியதற்காக தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்தில் ஒரு மாத கண்டிசன் பெயிலில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி- மணியாச்சி பேசஞ்சர் ரயில் வரும்போது, தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி, மாமியாரை வெட்டிய வழக்கில் கைது ஜாமீனில் வெளியே வந்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,railway station ,Tuticorin-Meelavittan ,
× RELATED உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி