×

கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

 

ஈரோடு, நவ.17: ஈரோடு மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கணேசன் தலைமை தாங்கி பேசுகையில்,“பள்ளி பருவத்தில் கூட்டுறவு குறித்து மாணவ, மாணவியர் அதிகம் அறிய வேண்டும்.

கூட்டுறவு மீது ஈடுபாடு அடைய வேண்டும். சாதாரண மக்களை கூட கூட்டுறவு அமைப்பு மேன்மைப்படுத்தும். அதற்கான கட்டமைப்பை உணர வேண்டும்’’ என்றார்.
நடுவர்களாக சார் பதிவாளர்கள் சுமித்ரா, ஹஸீனாபானு, முதுநிலை ஆய்வாளர் சன்மதி, இளநிலை ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக, ஒன்றிய மேலாளர் சக்திவேல் வரவேற்றார். பேச்சு போட்டியில் 53 மாணவ, மாணவியரும், கட்டுரை போட்டியில் 42 மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். முடிவில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

The post கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Cooperative Week ,Erode ,All India Cooperation Week ,Cooperation Week ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்